Source :
http://www.dinamalar.com/humantrustdetail.asp?news_id=209
மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளுக்கு சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள "மக்கு' பையன்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரவு, பகலாக பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தேன். இந்தாண்டு 96 பேர் நூற்றுக்கு நூறு மார்க் பெற தயாராகி வருகின்றனர்'' என்று பெருமிதம் கொள்கிறார் பாலாஜி.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார். எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ., என்று இவரின் தகுதி நீள்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காகவே பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.""ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை தேர்வு செய்தோம். மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், இவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் இலவச உணவு, கைடுகளை கொடுத்து நானும், எனது நண்பர்களும் பயிற்சி அளித்து வருகிறோம்.
தற்போது இந்த மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயிற்சி அளிக்க, திருமலை நாயக்கர் மகால் எதிரேயுள்ள பள்ளியை மாநகராட்சி ஒதுக்கி தந்துள்ளது'' என்று கூறும் பாலாஜி, பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி நுணுக்கங்கள், எப்படி சுருக்கமாக பதில் தருவது என பல "ரகசியங்களை' சொல்ல, இவரால் தேர்வில் வென்ற மாணவர்கள் இன்று வாழ்க்கையிலும் ஜெயித்துள்ளனர்.
""மாணவர்கள் மட்டுமில்லாது, எனது துறையில் வேலைபார்க்கும் ரிக்கார்டு கிளார்க், அலுவலக உதவியாளர்கள்15பேரை துறைத் தேர்வு எழுத வைத்து, அவர்களை இளநிலை உதவியாளராக பதவி உயர்த்தியுள்ளேன்'' என்று தனது இன்னொரு சேவை குறித்தும் மனம் திறக்கிறார் பாலாஜி.அடுத்த கட்டமாக, மாணவியருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ள பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் "சிடி'க்கள் மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, மற்ற பள்ளி மாணவர்களும் பாலாஜியை 98653 87352ல் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment